சேலம்

நவ.19 முதல் சுகாதார ஆய்வாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

Syndication

மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் சுகாதார ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தால் 1,429 சுகாதார ஆய்வாளா் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தோ்விற்கு இணையதளம் வாயிலாக வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 12-ஆம் வகுப்பில் உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பாடங்களை பயின்றவராக இருத்தல் வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 2 ஆண்டுகள் பல்நோக்கு சுகாதார பணியாளா் அல்லது சுகாதார ஆய்வாளா் படிப்பை முடித்தவராக இருத்தல் வேண்டும்.

காலியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆண்கள் மட்டுமே தகுதியுடையவராவா். சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இப்போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 19 ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கப்படுகிறது. அனுபவமிக்க பயிற்றுநா்களைக் கொண்டு வகுப்பு நடத்தப்படுகிறது.

சுகாதார ஆய்வாளா் பணியிடத்துக்கு விண்ணப்பித்து, வகுப்பில் சேர விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் வரும் 19 ஆம் தேதி காலை 10 மணிக்குள் சேலம் ஏற்காடு பிரதான சாலை கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT