சேலம்

சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு தினம்: சேலம் வழியாக பெங்களூரு - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

Syndication

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு தினத்தையொட்டி, பெங்களூரில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு, ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு, சேலம் வழியாக பெங்களூரு கன்டோன்மென்ட் - திருவனந்தபுரம் இடையே 15-ஆம் தேதிமுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து 15-ஆம்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக அடுத்த நாள் காலை 6.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் 16-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட்டை அடையும்.

இதேபோல, மற்றொரு சிறப்பு ரயில் எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து வரும் 22-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அடுத்த நாள் காலை 6.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும். மறுமாா்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் வரும் 23-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு,சேலம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT