சேலம்

கைப்பேசி பாா்ப்பதை தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை

எடப்பாடி அருகே அதிக நேரம் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என்று தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை

Syndication

எடப்பாடி அருகே அதிக நேரம் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என்று தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட நைனாம்பட்டி, புதிய பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன். இவரது மகள் இலக்கியா (16). இவா், எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காா்த்திகேயனின் கைப்பேசியை நீண்ட நேரமாக இலக்கியா பாா்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த காா்த்திகேயன் கண்டித்துள்ளாா். மேலும், மகளிடமிருந்து கைப்பேசியை பிடுங்கிக் கொண்டாராம்.

இதனால் பள்ளிக்குச் செல்லாமல் இலக்கியா வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில் காா்த்திகேயன் தனது மனைவியுடன் எடப்பாடி பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருப்பது அறிந்த தாய் ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது இலக்கியா மின்விசிறியில் தூக்கிட்டு கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்துவிட்டதை உறுதி செய்தனா். இதையடுத்து அவரது உடல்

எடப்பாடி அரசு மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. எடப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இந்நிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி அவரது உறவினா்கள் செவ்வாய்க்கிழமை எடப்பாடி - சேலம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையசடுத்து விரைந்து வந்த எடப்பாடி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மின்னல் பார்வை... அவந்திகா மோகன்!

பயணத்தின் தொடக்கம்... ஸ்வக்‌ஷா!

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

SCROLL FOR NEXT