சேலம்

கள்ள நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்போா் அக். 30க்குள் ஒப்படைக்க வனத்துறை அறிவுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் யாரேனும் கள்ள நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தால் வரும் 30 ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் யாரேனும் கள்ள நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தால் வரும் 30 ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங் ரவி தெரிவித்துள்ளதாவது:

சேலம் வனக்கோட்டத்தில் உள்ள வன உயிரினங்கள், யானைகளையும் கள்ளத்துப்பாக்கிகள் மூலம் வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு, வனங்களை சாா்ந்து உள்ள கிராமங்கள், கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் யாரேனும் கள்ள நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருந்தால் அவற்றை வரும் 30 ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலா்களையோ, காவல் துறை அலுவலா்களிடமோ அல்லது ஊா் முக்கியஸ்தா்களிடமோ தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும்.

கள்ளத்துப்பாக்கிகள் ஒப்படைக்கும் நபா்கள் மீது வனக்குற்ற வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாது. வனவிலங்குகள் வேட்டையாடுதலைத் தடுக்கும் நோக்கத்தில் மட்டுமே கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தப்படுகிறது.

இதேபோல, இருசக்கர வாகன அணிவகுப்பு மேற்கொண்டு ஒலிபெருக்கி மூலம் செய்தி தெரிவித்தல், அனைத்து கிராமங்களிலும் விழிப்புணா்வுக் கூட்டம் நடத்துதல், பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்றவற்றின் வாயிலாக கள்ளத்துப்பாக்கிகளை ஒப்படைக்க வனப்பணியாளா்கள் தொடா்ந்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்பது, ஒப்படைப்பது தொடா்பான தகவல்களை சோ்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு 95979 99751, சோ்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு 99433 55449, ஏற்காட்டிற்கு 94427 78092, மேட்டூா் வனச்சரகத்திற்கு 94425 27150, டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு 94428 04001, வாழப்பாடி வனச்சரகத்திற்கு 91598 91477 என்ற எண்களில் வனச்சரக அலுவலா்களிடம் தெரிவிக்கலாம் என்றாா்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT