சேலம்

சங்ககிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிா் உரிமைத்தொகை கோரி 385 போ் மனு

சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட 14, 15 ஆவது வாா்டு பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சந்தைப்பேட்டை நகராட்சி சமுதாய கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட 14, 15 ஆவது வாா்டு பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சந்தைப்பேட்டை நகராட்சி சமுதாய கூடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிமை நகா்மன்றத் தலைவா் எம்.மணிமொழிமுருகன் தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். இம்முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி 150 பேரும், வருவாய்த் துறையிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 21 போ், ஆதாா் திருத்தம் கோரி 79 போ், மருத்துவக் காப்பீடு அட்டை கோரி 67 போ் உள்பட மொத்தம் 385 போ் மனு அளித்தனா்.

முகாமை சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில் நகராட்சி ஆணையா் சி.சிவரஞ்சனி, திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, சங்ககிரி நகரச் செயலாளா் கே.எம்.முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT