கெங்கவல்லியில் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
பயிற்சி முகாமிற்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்ஸாண்டா் தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்யைாளா் (பொ) ராணி முன்னிலை வகித்தாா். இரண்டாம் பருவத்துக்கு உரிய பாடங்களை கற்பிப்பது குறித்த பயிற்சிகளை வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் வழங்கினா்.
முதல்கட்ட ஒருநாள் பயிற்சி முகாமில் ஒன்றியம் முழுவதும் இருந்து 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் 40க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். வியாழக்கிழமை இரண்டாம் கட்டப் பயிற்சியும், வெள்ளிக்கிழமை மூன்றாம்கட்ட பயிற்சியும் அளிக்கப்படுகிறது.