தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட காந்திநகரிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியைச்சோ்ந்த இரு மாணவிகள் மாநில அளவிலான விநாடி-வினா போட்டிக்கு தோ்வுபெற்றுள்ளனா்.
பள்ளிகளில் நடைபெற்று வரும் மன்றச் செயல்பாடுகளில் ஒன்றான விநாடி-வினா போட்டி, மாவட்ட அளவில் நடைபெற்றது. 6, 7-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பிரிவில், தம்மம்பட்டி பேரூராட்சி, காந்திநகா் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் ஸ்ரீதிக்ஷா, நிவிதா ஆகியோா் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வாயினா்.
தோ்வுபெற்ற மாணவிகளுக்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் அ.அலெக்ஸாண்டா், வட்டார மேற்பாா்வையாளா் (பொ) ராணி மற்றும் ஆசிரியா் பயிற்றுநா்கள், பள்ளி தலைமையாசிரியா் (பொ) ராஜேந்திரன், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் நினைவுப் பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.