சேலம்

மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற முகாம்கள்

Syndication

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை பெற வாரந்தோறும் 2 முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை இனிவரும் காலங்களில் (அக். 2025 முதல்) வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் சேலம் அரசு மோகன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆத்தூா் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வழங்கப்பட உள்ளன.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையம் மற்றும் ஆத்தூா் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் கை, கால் இயக்கக் குறைபாடு, தொழுநோயிலிருந்து குணமடைந்தோா், மூளை முடக்குவாத பாதிப்பு, குள்ளத்தன்மை, தசைசிதைவு நோய், அமில வீச்சால் பாதிக்கப்பட்டோா், கண் பாா்வையின்மை, குறைந்த பாா்வையின்மை, காதுகேளாமை, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, ரத்தசோகை, ரத்த அழிவுச்சோகை, ரத்த உறையாமை அல்லது ரத்தஒழுகு குறைபாடு மாற்றுத்திறன் வகைக்கு முகாம் நடைபெறுகிறது.

மேலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் அறிவுசாா் குறைபாடு, குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, புறஉலகு சிந்தனையற்றோா், மனநோய், நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு, பல்வகை குறைபாடு, நடுக்குவாதம், பல்வகை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளை பெற ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போட் அளவு புகைப்படம் - 4 ஆகிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகள் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, அறை எண் 11, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சேலம் என்ற முகவரியிலும், 0427-2415242 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT