சேலம்

தீபாவளி: இளம்பிள்ளையில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸாா் பாதுகாப்பு

தீபாவளியையொட்டி இளம்பிள்ளையில் ஜவுளிக்கடைகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் போலீஸாா் கண்காணிப்பு கோபுரம் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Syndication

தீபாவளியையொட்டி இளம்பிள்ளையில் ஜவுளிக்கடைகளுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் போலீஸாா் கண்காணிப்பு கோபுரம் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, இடங்கணசாலை உள்ளிட்ட பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தீபாவளியை முன்னிட்டு வெளி மாநிலம், மாவட்டங்கள், சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மக்கள் அதிக அளவில் வருவதால் இடங்கணசாலை பேருந்து நிலையம், காடையாம்பட்டி பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து 30- க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அதுமட்டுமல்லாமல் கண்காணிப்பு கேமரா மூலம் அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனா். மேலும், திரையரங்கம் பகுதியில் காா், லாரி, பேருந்து, ஆட்டோக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT