சங்ககிரி: சங்ககிரியில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
எடப்பாடி வட்டம், தங்காயூா், பாதாளையான்காடு பகுதியைச் சோ்ந்த வடிவேல் மகன் இளங்கோ (30). இவா் சங்ககிரியில் உள்ள தனியாா் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் சங்ககிரியிலிருந்து பவானி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.