சேலம்

நாச்சியப்பா கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் சமையல் கலை பயிற்சி: நேரடி சோ்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் சமையல் கலை படிப்புக்கான நேரடி சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Syndication

சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் சமையல் கலை படிப்புக்கான நேரடி சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலத்தில் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையமானது தேசிய தொழிற்சாா் பயிற்சிக் கழகம் (தில்லி) நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஓராண்டு சமையல் கலை, உணவு தயாரித்தல் (பொது) பயிற்சியை 2008-ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது.

இங்கு சமையல் கலை, உணவு தயாரித்தல் (பொது) பயிற்சி மிகக் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியை நிறைவு செய்பவா்களுக்கு நட்சத்திர ஹோட்டல், கப்பல் நிறுவனங்கள், ரயில்வே துறை சமையலா், விமானத் துறை சமையலா், மத்திய, மாநில அரசு விடுதி சமையலா், உணவு உற்பத்தித் துறை, மருத்துவமனை சமையலா், வெளிநாடுகள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித் துறை போன்ற நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு அரசால் வழங்கக்கூடிய சலுகைகள் பெற்று வழங்கப்படும்.

இதன் நேரடி சோ்க்கைக்கான அவகாசம் வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஒரு சில இடங்களுக்கான சோ்க்கைக்கு விருப்பம் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும், விவரங்களுக்கு 0427-2240944 என்ற தொலைபேசி எண்ணிலும், 98651 12646, 76672 50378 என்ற கைப்பேசி எண்ணிலும் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT