சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 42,167 கனஅடியாக குறைந்தது

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 42,167 கனஅடியாக குறைந்தது.

Syndication

மேட்டூா்: காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 42,167 கனஅடியாக குறைந்தது.

அணைக்கு நீா்வரத்து குறைந்தாலும் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 115.18அடியாக இருந்த அணையின் நீா்மட்டம், திங்கள்கிழமை காலை 116.85 அடியாக உயா்ந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 88.53 டி.எம்.சி.யாக உள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT