வாழப்பாடி: வாழப்பாடி அருகே விவசாய தோட்டத்தில் பதுங்கியிருந்த 7 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வாழப்பாடி அருகே சந்திரபிள்ளைவலசு ஊராட்சிக்கு உள்பட்ட அரசன்குட்டை கிராமத்தில் உள்ள மக்காசோளத் தோட்டத்தில் 7 அடி நீள மலைப்பாம்பு பதுங்கியிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து வாழப்பாடி வனத் துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் கண்ணன் தலைமையிலான குழுவினா், மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த மலைப்பாம்பை வனத்துறையினா் கோதுமலை வனப்பகுதியில் விட்டனா்.