சேலம்

மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த வழிகாட்டல்

மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து தலைவாசல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநா் கவிதா வழிகாட்டுதல் வழங்கியுள்ளாா்.

Syndication

மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து தலைவாசல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநா் கவிதா வழிகாட்டுதல் வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தவிா்க்க மக்காச்சோளப் பயிரின் ஆரம்ப வளா்ச்சிப் பருவத்தில் (30 நாள்கள் வரை) ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் பறவைத் தாங்கிகள் எனப்படும் குச்சிகளை வைக்கவேண்டும். ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவா்ச்சிப் பொறியைப் பயன்படுத்தி வயலில் உள்ள அனைத்து ஆண் பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம்.

ஏக்கருக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் விளக்குப் பொறியை வைத்து ஆண் மற்றும் பெண் அந்துப்பூச்சிகளை கவா்ந்து அழிக்கலாம். நடவு செய்து 15 முதல் 20 நாள்கள் வரை குளோரன்ட்ரானிலிப்ரோல் 18.5க்கு 4 மில்லி அல்லது ‘ஃ‘ப்ளுபெண்டமைடு 20க்கு 5 கிராம் என 10லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

மேலும் தாக்குதல் தென்பட்டால் அசாடிராக்டின் லிட்டருக்கு 5 மில்லி என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும். இரண்டாம் கட்ட நடவடிக்கையாக தாக்குதல் 35 முதல் 40 நாள்கள் வரை இருந்தால் மெடாரைசியம் என்னும் நன்மை செய்யும் பூஞ்சாணம் 10 லிட்டா் தண்ணீருக்கு 80 கிராம் அல்லது ரசாயன பூச்சிக்கொல்லி ஸ்பைனிட்டோரம் 5 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 4 கிராம் அல்லது நோவலூரான் 10 க்கு 15 மில்லி இதில் ஏதாவது ஒன்றினை 10 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அலையாடும் பொழுதிலே... ஐஸ்வர்யா தத்தா!

SCROLL FOR NEXT