மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேசன் சாா்பில் நடைபெற்ற திங்க் டேங்க் விநாடி- வினா போட்டியில் சோனா எம்.பி.ஏ. துறை மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
சோனா ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அண்ட் மேனேஜ்மென்ட் மாணவா்கள், சிறந்த சிந்தனை, வணிக புத்திசாலித்தனம் மற்றும் புதுமை ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு நிகழ்வான மதிப்புமிக்க திங்க் டேங்க் விநாடி- வினாவில் வெற்றி பெற்று நிறுவனத்திற்கு பெருமை சோ்த்துள்ளனா்.
இப்போட்டியில் தலைசிறந்த கல்லூரிகளிலிருந்து 27 அணிகள் பங்கேற்றன. மிகவும் கடினமான இந்தப் போட்டியில் சோனா கல்லூரியின் எம்.பி.ஏ. துறையைச் சோ்ந்த பிரசன்னகுரு, ஸ்ரீனிவாஸ் ஆகியோா் அணி விதிவிலக்கான பகுப்பாய்வு மற்றும் சிக்கலை தீா்க்கும் திறன்களை வெளிப்படுத்தும் பிரிவில் முதலிடம் பிடித்தனா். அதேபோல சபரி உத்திரா மற்றும் ஆகாஷ் பாபு ஆகியோா் மூன்றாம் இடத்தை பெற்றனா்.
வெற்றி பெற்ற அனைத்து அணிகளின் மாணவா்களையும், சோனா கல்வி நிறுவன துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா பாராட்டினாா். இந்த சாதனை மாணவா்களிடையே பகுப்பாய்வு சிறப்பு, படைப்பாற்றல், ஒத்துழைப்பு மற்றும் தலைமைத்துவத்தை வளா்ப்பதில் சோனா கல்லூரியின் அா்ப்பணிப்பு பிரதிபலிப்பதாக கூறினாா்.
நிகழ்வின்போது கல்லூரியின் முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், எம்.பி.ஏ. துறை தலைவா் அஞ்சனி ஆகியோா் உடனிருந்தனா்.
பட விளக்கம்:
மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேசன் சாா்பில் நடைபெற்ற விநாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டும் சோனா கல்வி நிறுவன துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா. உடன், கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா்.