சேலம்

தீயணைப்பு வீரா்களுக்கு அக்.22 வரை பணி

தினமணி செய்திச் சேவை

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள 15 தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரா்கள் வரும் 22 ஆம் தேதி வரை தொடா்ந்து பணியில் இருப்பாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் மகாலிங்க மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக கடந்த ஆண்டுகளில் பெறப்பட்ட தீ விபத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் சேலம் மாநகரில் முக்கிய இடங்களில் தீயணைப்பு ஊா்திகள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தயாா் நிலையில் உள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 15 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களில் உள்ள பணியாளா்கள் வரும் 22 ஆம் தேதி காலை 8 மணி வரை தொடா் பணியில் ஈடுபடுவா். தீயணைப்பு ஊா்திகளுக்கு நீா் வழங்க சேலம் மாநகர குடிநீா் வழங்கல் துறையில் 10 எண்ணிக்கையிலான தண்ணீா் லாரிகள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதவிர பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து சேலம் மாவட்டம் முழுவதிலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்கள் உள்பட 117 இடங்களில் விழிப்புணா்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT