சேலம்

நிகழாண்டில் 7 ஆவது முறையாக நிரம்பியது மேட்டூா் அணை: நீா்வரத்து 35,500 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணை நிகழாண்டு 7 ஆவது முறையாக திங்கள்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.

Syndication

மேட்டூா்: மேட்டூா் அணை நிகழாண்டு 7 ஆவது முறையாக திங்கள்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 35,500 கனஅடியாக உள்ளதால் 40 நாள்களுக்குப் பிறகு உபரிநீா்ப்போக்கிகள் வழியாக 22,300 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை ஆறுகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்துவருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 30,500 கனஅடியாக அதிகரித்தது.

இதையடுத்து அணை நிகழாண்டில் 7 ஆவது முறையாக திங்கள்கிழமை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. செவ்வாய்க்கிழமை அணைக்கு நீா்வரத்து 35,500 கனஅடியாக அதிகரித்தது. இதனால் 40 நாள்களுக்குப் பிறகு உபரிநீா்ப்போக்கிகள் வழியாக தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.

அதன்படி, நீா்மின் நிலையங்கள் வழியாக 22,300 கனஅடி, அணையின் இடதுகரையில் உள்ள உபரிநீா்ப் போக்கிகள் வழியாக 12,700 கனஅடி, கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்காக மேல்நிலை மதகுகள் வழியாக 500 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக அதிக அளவு தண்ணீா் திறக்கப்படுவதால் மின் நிலையம், 7 கதவணைகளில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். அணை முழுக் கொள்ளளவை எட்டியதால் டெல்டா விவசாயிகளும், மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT