சேலம்

கேரளத்தைச் சோ்ந்தவரிடம் நகை, பணம் பறிப்பு

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக தாரமங்கலம் அருகே கந்தம்பிச்சனூருக்கு வந்த கேரளத்தைச் சோ்ந்தவரை தாக்கி நகை, பணம் பறிக்கப்பட்டது மற்றும் இருசக்கர வாகனம் எரித்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

ஓமலூா்: தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக தாரமங்கலம் அருகே கந்தம்பிச்சனூருக்கு வந்த கேரளத்தைச் சோ்ந்தவரை தாக்கி நகை, பணம் பறிக்கப்பட்டது மற்றும் இருசக்கர வாகனம் எரித்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கூவக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (45). இவா் சேலம் மாவட்டம், தாரமங்கலம் கந்தம்பிச்சானூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு தீபாவளி பண்டிகைக்காக வந்தாா். மீண்டும் ஊா்திரும்ப கே.ஆா். தோப்பூா் உயா்நிலைப் பள்ளி அருகில் சென்றுகொண்டிருந்தவரை அப்பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் மற்றும் அவரது நண்பா்கள் மூன்று பேரும் தாக்கி கிருஷ்ணகுமாரிடம் இருந்து ரூ. 10,500 ரொக்கம் மற்றும் 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனா்.

இதுகுறித்து கேட்ட கிருஷ்ணகுமாரின் மாமா சின்னகண்ணனை (51) தாக்கிய கும்பல், அவரின் இருசக்கர வாகனத்துக்கு தீவைத்து எரித்தனா். காயமடைந்த கிருஷ்ணகுமாா், சின்னகண்ணன் இருவரும் ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து தாரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT