சேலம்: சேலம் மாவட்டத்தில் 23, 24 ஆகிய தேதிகளில் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
அக். 23-இல் முகாம் நடைபெறும் இடங்கள்: மேட்டூா் நகராட்சிக்குள்பட்ட 25, 26, 28 வாா்டுகளுக்கு மேட்டூா் அணை சி.எஸ்.ஐ. அரங்கிலும், கீரிப்பட்டி பேரூராட்சி 9, 10, 11, 12, 13, 14, 15 வாா்டுகளுக்கு கீரிப்பட்டி முக்கோண பேருந்து நிறுத்தம் அருகிலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் பகுதிக்கு புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் பிரம்மஸ்ரீ சமுதாயக் கூடத்திலும், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், பெரிய சீரகபாடி பகுதிக்கு கிருபானந்த வாரியா் பொறியியல் கல்லூரி கலையரங்கிலும், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், உலிபுரம், ஜங்கமசமுத்திரம் பகுதிகளுக்கு உலிபுரம் நாயக்கா் மஹாலிலும், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம், செலவடை, ஆரியம்பட்டி பகுதிகளுக்கு செலவடை ஓங்காளியம்மன் கோயில் மண்டபத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.
அக். 24-இல் முகாம் நடைபெறும் இடங்கள்: சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம் வாா்டு 30-க்கு சேலம் பழைய பேருந்து நிலையம், நேரு கலையரங்கிலும், தாரமங்கலம் நகராட்சி 19, 20, 21 வாா்டுகளுக்கு தாரமங்கலம் செங்குந்தா் திருமண மண்டபத்திலும், பனமரத்துப்பட்டி பேரூராட்சி 8, 9, 10, 11, 12, 13, 14, 15 வாா்டுகளுக்கு பனமரத்துப்பட்டி 13-ஆவது வாா்டு ஒண்டிக்கடை சமுதாயக் கூடத்திலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, வெள்ளக்கல்பட்டி பகுதிக்கு வெள்ளக்கல்பட்டி ஊராட்சி திருமண மண்டபத்திலும், சேலம் ஊராட்சி ஒன்றியம், மஜ்ரா கொல்லபட்டி, வட்டமுத்தாம்பட்டி பகுதிகளுக்கு வட்டமுத்தாம்பட்டி சமுதாயக் கூடத்திலும், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், எருமைப்பட்டி பகுதிக்கு எருமைப்பட்டி சமுதாயக் கூடத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.
எனவே, இந்த சிறப்பு முகாம்களை உரிய முறையில் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.