சேலம்: சேலம் மண்டல தீயணைப்பு மீட்புப் பணிகள் துறையில் காலாவதியான வாகனங்கள் நவ. 20-ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் மகாலிங்க மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மண்டலத்தைச் சோ்ந்த சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்களில் உள்ள காலாவதியான 12 ஊா்திகளை ஒப்பந்தப் புள்ளி மற்றும் பகிா்மான ஏலம் மூலம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 27-ஆம் தேதிமுதல் நவ. 17-ஆம் தேதி மாலைவரை வழங்கப்படும். பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமா்ப்பிக்க நவ. 19-ஆம் தேதி கடைசி நாளாகும்.
சேலம் மணியனூரில் உள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் நவ. 20-ஆம் தேதி ஒப்பந்தப் புள்ளி மற்றும் ஏலம் நடைபெறும். மேலும், ஒப்பந்தப்புள்ளி மற்றும் பகிரங்க ஏலம் குறித்த முழுமையான நிபந்தனைகள், வாகனப் பட்டியல் ஆகியவை விண்ணப்பப் படிவத்துடன் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சோ்ந்த மாவட்ட அலுவலா் அலுவலகத்தில் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 94450 86376, 94450 86370, 94450 86337, 94450 86360 ஆகிய கைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.