சேலம்

காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி படுகாயம்

கெங்கவல்லி அருகே காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி படுகாயமடைந்தாா்.

Syndication

கெங்கவல்லி அருகே காட்டுப்பன்றி கடித்ததில் விவசாயி படுகாயமடைந்தாா்.

கெங்கவல்லி அருகே உள்ள வெள்ளையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி (65). விவசாயியான இவா் தனது நிலத்தில் மக்காசோளம் பயிரிட்டுள்ளாா். வழக்கம்போல நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் வந்த காட்டுப்பன்றி முத்துசாமியை துரத்தி கடித்தது. இதில் படுகாயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளையூா் ஏரி பகுதியில் அதிக அளவில் காட்டுப்பன்றிகள் உள்ளன. இவை அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் சாகுபடி செய்துள்ள மக்காச்சோளம், மரவள்ளி, கரும்பு உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. அவற்றை விரட்டும்போது, விவசாயிகளை தாக்கவும் செய்கின்றன.

எனவே, காட்டுப்பன்றிகளை பிடித்து, வனப்பகுதியில் விடுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

மின் கம்பியை மிதித்த விவசாயி, 2 எருமை மாடுகள் உயிரிழப்பு

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

SCROLL FOR NEXT