சேலம்

பருவமழை எதிரொலி: புதைவடக் கம்பிகள் குறித்து தகவல் தெரிவிக்க மின்வாரியம் வேண்டுகோள்

பருவமழையையொட்டி ஆபத்து விளைவிக்கும் வகையில் புதைவடக் கம்பிகள் இருந்தால், அதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தல்

Syndication

பருவமழையையொட்டி ஆபத்து விளைவிக்கும் வகையில் புதைவடக் கம்பிகள் இருந்தால், அதுகுறித்து உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக, சேலம் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கை: மின்சாதனப் பொருள்களை பயன்படுத்தி தரமான ஒயரிங் வேலைகளை அனுமதிபெற்ற ஒப்பந்தாரரா்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். மின்வாரியத்தின் அனுமதியின்றி கம்பங்களில் ஏறவோ அல்லது மின்மாற்றியில் ‘பியூஸ்’ போடவோ கூடாது.

பழுதடைந்த மின்பாதைகள், மின் கம்பிகள் அறுந்து இருந்தாலோ, கீழே கிடந்தாலோ அல்லது தொங்கிக் கொண்டிருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மின் கம்பத்திலோ, அது சம்பந்தப்பட்ட பொருள்களிலோ கொடிகளைக் கட்டி துணிகளை காயவைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் புதைவடக் கம்பிகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள்: மின்வாரிய அலுவலகம் - 94987 94987, மேற்பாா்வை பொறியாளா் - 94458 52300, சேலம் நகர செயற் பொறியாளா் - 94458 52090, கிழக்கு செயற்பொறியாளா் - 94458 52310, மேற்கு செயற்பொறியாளா் - 94458 52320, தெற்கு செயற்பொறியாளா் - 94458 52330, வாழப்பாடி செயற்பொறியாளா் - 94458 52350, ஆத்தூா் செயற்பொறியாளா் - 94458 52340, கெங்கவல்லி செயற்பொறியாளா் - 94450 60630 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT