தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலருக்கும், துணைத்தலைவரின் கணவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலராக கடந்த 17ந்தேதி மேச்சேரியிலிருந்து மாறுதலாகி பொறுப்பேற்று இருப்பவா் சோமசுந்தரம்.இந்நிலையில் தம்மம்பட்டி பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று செயல் அலுவலா் சோமசுந்தரத்திடம், பேரூராட்சி துணைத்தலைவா் சந்தியாவின் கணவா் ரஞ்சித்குமாா் கேட்டுள்ளாா்.
இதுதொடா்பாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் இருவரும் , அலுவலகத்திலிருந்த மேஜையை தட்டித்தட்டி பேசினா். வாய்த்தகராறு முற்றியதைத்தொடா்ந்து, அருகில் இருந்த வாா்டு கவுன்சிலா்கள், பேரூராட்சி பணியாளா்கள் அனைவரும் சோ்ந்து, அவா்கள் இருவரையும் விலக்கி வைத்து சமாதானம் செய்தனா்.
தம்மம்பட்டி பேரூராட்சி மன்ற வரலாற்றில், முதன்முறையாக செயல் அலுவலரிடம் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதால், தம்மம்பட்டி மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.