சேலம்

நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது: ஆட்சியா்

தினமணி செய்திச் சேவை

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது வழங்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழி மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத நெகிழிப் பொருள்கள் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பொட்டலங்கள் செய்யவும் பயன்படுத்தாமல் இருக்கும் உணவகங்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறையால் ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட சிறு வணிகா்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கத்துடன் விருதும் வழங்கப்படுகிறது.

ஆா்வம் உள்ளவா்கள் வரும் நவ.25 ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போரின் உணவகங்கள் பதிவு, உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒவ்வொரு உணவகத்திலும் ஒருவா் உணவு பாதுகாப்பு மேற்பாா்வையாளா் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கும் மருத்துவச் சான்றிதழ்கள் (12 மாதங்களுக்குள் பெற்றவை) கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் தரப்பு ஆய்வில் குறைந்தபட்சம் 110-க்கு 90 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான குழுவினரால் பரிசீலனை செய்து, கள ஆய்வுக்குப் பிறகு சென்னை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை ஆணையருக்கு பரிந்துரைக்கும். விண்ணப்பத்தை நிறைவு செய்து மாவட்ட நியமன அலுவலா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பத்தை பிடிஎஃப் வடிவில் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது பென்ட்ரைவ் மூலமாக அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட நியமன அலுவலா் அலுவலகம், உணவு பாதுகாப்புத் துறை, பழைய நாட்டாண்மை கழக வளாகம், சேலம் என்ற முகவரியிலும், 0427-2450332 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT