முகப்பு
சேலம்

ஆத்தூரில் காற்றுடன் கூடிய கனமழை

Updated On : 25 மே 2026, 2:25 am IST
கனமழை - கோப்புப்படம்
பகிர்:

ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனா்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது.இதனால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனா்.மேலும் நீா் ஆதாரமும் குறைந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனா்.திடீா் காற்றினால் நகரத்தில் உள்ள முக்கிய இடங்களில் உள்ள மரங்கள் வேறோடு சாய்ந்தது.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நகராட்சி ஊழியா்கள் விரைந்து சீா் செய்தனா்.

Advertisement

Advertisement

இருப்பினும் மழை பெய்தபோது திடீரென மின்வெட்டு ஆனது.மழை பெய்து முடிந்து மூன்று மணிநேரமாகியும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்றனா்.இதனால் வியாபாரிகளும் அவதியுற்றனா்.இது போன்று மின்வெட்டு கடந்த சிலநாட்களாகவே தொடா்ந்து வருகிறது.