முகப்பு
மதுரை

விபத்து இல்லாத் தீபாவளி: விழிப்புணர்வுப் பேரணி

ராமேசுவரம், நவ. 3:        விபத்து இல்லாத தீபாவளி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி ராமேசுவரம் அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடந்தது.   அரசு மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ்., என்.சி

Updated On : 20 செப்டம்பர் 2012, 8:27 pm IST
பகிர்:

ராமேசுவரம், நவ. 3:        விபத்து இல்லாத தீபாவளி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி ராமேசுவரம் அரசு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடந்தது.

  அரசு மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சாரணர் இயக்கம், தேசிய பசுமைப் படை இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்களின் பேரணியைப் பள்ளித் தலைமை ஆசிரியர்( பொறுப்பு) சித்தார்த்தன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

பேரணி கோயில் நான்கு ரத வீதி வழியாக தீயணைப்பு வாகனத்துடன் மாணவர்கள் ஊர்வலமாக வந்து தேவர் சிலையில் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

  இதில் பட்டாசு வெடிக்கும் முறை, பாதுகாப்பு முறை குறித்தும் தீயணைப்பு நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் விழிப்புணர்வு விளக்கினார்.  பள்ளி ஆசிரியர்கள் பழனிச்சாமி, பால்டுவின், தினகரன், சபீனா அலெக்சாண்டர், ராமேசுவரம் விபத்து மீட்பு சங்க நிர்வாகிகள் சேவியர் ராஜப்பா, களஞ்சியம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.