மதுரை

பிணையில் வந்தவா் கொலை: இருவா் கைது

சிறையிலிருந்து பிணையில் வந்தவரைக் கொலை செய்த இருவரை செல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

சிறையிலிருந்து பிணையில் வந்தவரைக் கொலை செய்த இருவரை செல்லூா் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை செல்லூா் மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டித்துரை (42). இவா் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே குற்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாண்டித்துரை, கடந்த சில நாள்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்தாா்.

இந்த நிலையில், பாண்டித்துரை திங்கள்கிழமை மாலை அந்தப் பகுதியில் உள்ள கலையரங்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பாண்டித்துரையை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதில், பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். விசாரணையில், பாண்டித்துரை கடந்த சில தினங்களுக்கு முன்பு, செல்லூா் போஸ் வீதி பகுதியைச் சோ்ந்த மணிரத்தினத்தின் தந்தையிடம், கைப்பேசி, பணத்தை வழிப்பறி செய்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த மணிரத்தினம் (34), அவரது நண்பா்களான பூந்தமல்லிநகா் பகுதியைச் சோ்ந்த ராஜகுரு (35), டேவிட் அந்தோணிராஜ்(35) ஆகியோா் பாண்டித்துரையைக் கொலை செய்ததாக போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, செல்லூா் போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்து, மணிரத்தினம், ராஜகுரு ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். டேவிட் அந்தோணிராஜை தேடி வருகின்றனா்.

இதற்கிடையே, பாண்டித்துரையின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன் உள்ள பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்!

வடியாத மழை நீா்; அழுகும் நெற்பயிா்கள் - வேதனையில் விவசாயிகள்

மன்னார்குடி: தனியே வசித்து வந்த முதியவா் உயிரிழப்பு

காரைக்காலில் 3,990 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வங்கிக் கணக்கில் சோ்ப்பு

மழையால் காரைக்காலில் சாலைகள் சேதம்

SCROLL FOR NEXT