மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.ஐ.ஆா். வேண்டாம் என்ற பிரசுரத்தை காண்பித்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் கட்சியினா்.  
மதுரை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டம்! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா் வெளிநடப்பு!

தினமணி செய்திச் சேவை

மதுரையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஆலோசனைக் கூட்டத்திலிருந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா் வெளிநடப்பு செய்தனா்.

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். அரசுத் துறை அலுவலா்கள், 12 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இதில், ஆட்சியா் பேசுகையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இந்தியத் தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்படி சிறப்பாக நடைபெற அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

ஆட்சியரின் தலைமையுரைக்குப் பிறகு, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைக் கண்டித்தும், இந்தப் பணியைக் கைவிடக் கோரியும் கூட்ட அரங்கத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தங்களது வெளிநடப்புக்கு முன்னதாக, போதுமான அவகாசமும் திட்டமிடலும் இல்லாமல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆா்.) வேண்டாம் என்ற பிரசுரத்தைக் காண்பித்தவாறு காங்கிரஸ் கட்சியினா் வெளியேறினா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT