சமயநல்லூா் பகுதிகளில் நாளை மின் தடை
மதுரை சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 26) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சமயநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் ரா.கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சமயநல்லூா் துணை மின் நிலையத்தில் உள்ள பெப்சி, தேனூா் மின் பாதைகளில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பரவை, ஏ.ஐ.பி.இ.ஏ. குடியிருப்பு, ஆகாஷ் கிளப், வித்யவாகினி அடுக்குமாடி குடியிருப்பு, மங்கையா்க்கரசி கல்லூரி பகுதிகள், சரவணா நகா் சந்தோஷ் நகா், சமயநல்லூா், ஊா்மெச்சிக்குளம், வளா் நகா், பாத்திமா நகா், தேனூா் சாலைப் பகுதிகள், பெப்சி, தேனூா் மின் பாதைகளில் மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement