திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே மதுக்கடையை எதிர்த்து சாலை மறியல்

வேடசந்தூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

DIN

வேடசந்தூர் அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 வேடசந்தூர்- கரூர் சாலையில் உள்ள கருக்காம்பட்டி பகுதியில் புதிய மதுக் கடை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி கடையை திறப்பதற்காக புதன்கிழமை அவர்கள் சென்றனர்.
அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், வேடசந்தூர்- கரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீஸார், அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட நிர்வாகம் மூலம் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT