பழனியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி பேருந்து நிலையம் முன் மத்திய அரசின் மாடுவதை தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பாலச்சந்திரபோஸ், மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலர் பாலாஜி உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். இதில் நகர்க்குழு உறுப்பினர்கள், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.