இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு விண்ணப்பித்துள்ள முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளது: இந்திய கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு, பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் 70 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் 25.6.2017-க்குள் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், இந்திய விமானப் படையில் சேர இருபால் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 24 வயதுக்குள்பட்டவராகவும், எலெக்ரானிக்ஸ், ஏரோ-நாட்டிகல் இன்ஜினீயர் சார்ந்த பொறியியல் படிப்பு முடித்தவர்களாகவும் இருக்க வேண்டும். 29.6.2017-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய ராணுவத்தில் கல்விப் படை பிரிவிலான பணியிடங்களுக்கு, எம்.ஏ., எம்.எஸ்சி. பூகோளம், பொருளாதாரம் போன்ற பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 23 முதல் 27 வயதுக்குள்பட்டவர்கள் 14.6.2017-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் www.join indianarmy.nic in, www.joinindianairforce.nic.in, www.joinindianavy.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்பணிகளுக்கு விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், விண்ணப்பதாரர்கள் தங்களது பெயரை, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.