திண்டுக்கல்

தொடக்கக் கல்வித்துறையில் மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்

தொடக்கக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.

DIN

தொடக்கக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் த.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளது: மே 19 ஆம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு முற்பகலிலும், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு பிற்பகலிலும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும்.
 நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு, பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்), பதவி உயர்வு கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்), பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) திங்கள்கிழமை (மே 22) நடைபெறுகிறது.
 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு செவ்வாய்க்கிழமையும் (மே 23), இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு புதன்கிழமையும் (மே 24), இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம்) வியாழக்கிழமையும் (மே 25) நடைபெறுகிறது. திங்கள் முதல் வியாழக்கிழமை வரை நடைபெறும் அனைத்து கலந்தாய்வுகளும் திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) வெள்ளிக்கிழமையும் (மே 26), இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் (மே 29 மற்றும் 30) மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT