நத்தம் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர்.
தேவகோட்டையிலிருந்து திண்டுக்கல் நோக்கி அரசுப் பேருந்து வந்தது. இப்பேருந்து நத்தம் பூதகுடி அருகே வந்த போது எதிரே வந்த லாரிக்காக பேருந்தை ஓட்டுநர் திருப்பினார். அப்போது, எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த, காரைக்குடியை சேர்ந்த சுந்தரம்(40), வெள்ளையன்(55), திருப்பத்தூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி( 57), நத்தத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி(65) உள்ளிட்ட 11 பேர் காயமடைந்து நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில், காரைக்குடியை சேர்ந்த சோலையப்பன்(74), ஹரிஷ்குமார்(19) ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.