பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை ஸ்ரீபோகர் சித்தரின் ஜயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.
விழாவையொட்டி போகர் வழிபட்ட மரகதலிங்கத்துக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், கனி வர்க்கங்கள், சந்தனம் உள்ளிட்ட ஏராளமான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் தலைமையில் ஜம்பு சுவாமிகள் உள்ளிட்டோர் செய்தனர்.
தொடர்ந்து மரகதலிங்கம், கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு போகர் வழிபட்ட மற்ற சிலைகள், சக்கரங்களுடன் வைக்கப்பட்டது. பின்னர் அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது.
அடிவாரம் கிரிவீதியில் இரவு ஸ்ரீஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை சார்பில் அலங்கார ரதத்தில் போகர் ஊர்வலம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ. அன்பழகன், டாக்டர் பன்னீர்செல்வம், சிவசேனா மாவட்ட கொள்கை பரப்புச் செயலர் சசிக்குமார், புலிப்பாணி பரம்பரை செல்வநாதன், கெளதம் கார்த்திக், பாலசுப்பிரமண்யம், ஸ்ரீஞானதண்டாயுதபாணி பக்தர் பேரவை செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.