திண்டுக்கல்

அணையில் குளித்த போது பாறையில் தலை மோதி இளைஞர் சாவு

பழனி அருகே வரதமாநதி அணையில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற இளைஞர் பாறையில்  தலை மோதி உயிரிழந்தார்.

DIN

பழனி அருகே வரதமாநதி அணையில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற இளைஞர் பாறையில்  தலை மோதி உயிரிழந்தார்.
     பழனி பெரியப்பா நகரைச் சேர்ந்தவர் முத்து.  இவரது மகன் மோகன் (30). இவர் தந்தையுடன் திருமண மணவறை அலங்கார வேலைகள் செய்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை பழனி வரதமாநதி அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார்.  அப்போது குளிப்பதற்காக மேடான பகுதியில் இருந்து அணையில் குதித்த போது பாறையில் தலை மோதி பலத்த காயம் அடைந்தார்.  உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

நிலவோடு பிறந்தவளா... மெஹ்ரீன் பிர்சாடா!

பதவி ராஜிநாமாவிற்கு பிறகு முதல்முறையாக ராஜஸ்தான் செல்லும் தன்கர்

95% சேவை மீட்டெடுப்பு: இண்டிகோ அறிவிப்பு!

SCROLL FOR NEXT