திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி மாணவிகள் மாநில கூடைப்பந்து போட்டிக்கு தேர்வு

மாநில கூடைப்பந்துப் போட்டிக்கு தேர்வான பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

DIN

மாநில கூடைப்பந்துப் போட்டிக்கு தேர்வான பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவிகளுக்கு புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
 குடியரசு தின மற்றும் பாரதியார் நினைவு தின விளையாட்டுப் போட்டிகளுக்கான மண்டல கூடைப்பந்துப் போட்டி கம்பத்தில் நடைபெற்றது.  இதில் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி. பள்ளி மாணவிகள் 17 மற்றும் 19 வயதிற்குள்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றனர்.
 இரண்டு நிலைகளிலும் பட்டிவீரன்பட்டி மாணவிகள் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.
இதனை அடுத்து 2 அணிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கும்,  பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும்,  பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.  
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ராஜாராம்,  பள்ளித் தலைவர் கருணாகரன்,  முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் கலந்து  கொண்டு வெற்றிப் பெற்ற அணியினரை பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவாவில் இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: அமித் ஷா இரங்கல்

அறவழியில் செயல்பட வேண்டும்

“விருச்சிகம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சூர்யா 47 பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு - புகைப்படங்கள்

கண்ணாமுச்சி ஏனடா? சினேகா!

SCROLL FOR NEXT