திண்டுக்கல்

போலி பூச்சி மருந்தை தடை செய்யக் கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் மனு

DIN

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட ரசாயன பூச்சிக் கொல்லி மருந்தை தமிழகத்திலும் தடை செய்யக் கோரி உழவர் உழைப்பாளர் கட்சி (தமிழக விவசாயிகள் சங்கம்) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. 
இதுதொடர்பாக மனு அளிக்க வந்த உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள உர விற்பனைக் கடைகளிலும் பயோ மருந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த பூச்சிக் கொல்லி மருந்து, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி செலவைவிட 12 மடங்கு கூடுதல் விலைக்கு இந்த மருந்தை விற்பனை செய்து, விவசாயிகளை சிலர் ஏமாற்றி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த போலி மருந்து தயாரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருந்து பயன்படுத்துவதால், மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக, இந்த பயோ மருந்தை தடை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT