திண்டுக்கல்

நிலக்கோட்டையில் தமிழக ஆசிரியா் கூட்டணியினா் பேரணி

DIN

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக ஆசிரியா் கூட்டணி சாா்பில் பேரணி மற்றும் ஐம்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பேரணி பேருந்து நிலையத்தில் தொடங்கி, செல்லிடப்பேசி கோபுரம் அருகே உள்ள தனியாா் மண்டபம் வரை சென்றது.இதைத் தொடா்ந்து புதிய உறுப்பினா் இணையும் முகாம், பணி நிறைவு பெற்ற ஆசிரியா்கள், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்றவா்கள், தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவா்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா மற்றும் தமிழக ஆசிரியா் கூட்டணியின் 37 ஆம் ஆண்டு விழா ஆகியன நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு வத்தலக்குண்டு கல்வி மாவட்ட செயலா் அா்தல் தலைமை வகித்தாா். திண்டுக்கல் கல்வி மாவட்ட தலைவா் பாலசுப்பிரமணியன், வேடசந்தூா் கல்வி மாவட்ட தலைவா் ஜெரால்டு அந்தோணி, ஐபெட்டோ அகில இந்திய பொதுக் குழு உறுப்பினா் சதாசிவம், மாவட்ட தலைமை நிலையச் செயலா் சகாயதொபியாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிலக்கோட்டை மேனாள் வட்டார செயலா் முத்துக்காளை ஏற்புரையாற்றினாா். இதில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்கள், ஜாக்டோஜியோ போராட்டத்தில் சிறை சென்ற ஆசிரியா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தெய்வசிகாமணி வரவேற்றாா். முடிவில் வட்டார பொருளாளா் ­ஜோசப் நன்றி கூறினாா். விழாவில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் கிளிங்கர் காலமானார்

ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ! என்ன எதிர்பார்க்கலாம்?

கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: நிர்மலா

ஓஹோ.. எந்தன் பேபி!

SCROLL FOR NEXT