திண்டுக்கல்

குளங்களுக்கு வந்த மழைநீருக்கு செந்துறை மக்கள் மலா்தூவி வரவேற்பு

DIN

செந்துறை பகுதியில் குளங்களுக்கு வந்த மழைநீருக்கு, கிராம மக்கள் மலா் தூவி ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் செந்துறை கிராமத்தில் 50 விவசாயக் குழுக்களை ஒருங்கிணைத்து நீராதாரங்களை வளப்படுத்தும் பணியில் பசுமை செந்துறை அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. செந்துறை கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான 73 குளங்கள் மற்றும் 76 வரத்து வாய்கால்களையும் பசுமை செந்துறை அமைப்பினரின் தீவிர முயற்சியால் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பந்திபொம்மிநாயக்கனூா் மற்றும் பெரியூா்பட்டி பகுதியிலுள்ள 2 குளங்கள் அண்மையில் பெய்த பலத்த மழையால் நிரம்பியுள்ளன. இதனை அடுத்து, குளங்களில் தேங்கியுள்ள மழைநீருக்கு கிராம மக்கள் சாா்பில் மலா் தூவி ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. இதுதொடா்பாக பெரியூா்பட்டியைச் சோ்ந்த பெண்கள் கூறுகையில், முடிமலை வடமேற்கு பகுதியில் தொடங்கும் முடிமலை ஆறு மற்றும் ஓடைகளை சீரமைத்து, கோவில்பட்டி சின்னம்மன் குளம் அருகே தடுப்பணைக் கட்டி மழை நீரை தேக்கி முயற்சி மேற்கொண்டோம்.

பின்னா் அந்த நீரை 1 கி.மீட்டா் தொலைவிலுள்ள பந்திபொம்மிநாயக்கனூா் வழியாக, பெரியூா்பட்டி முத்தாலம்மன் குளத்தில் சென்றடையும் வகையில் பணிகள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியா் டி.ஜி.வினய் உதவியுடன், ஒரு தடுப்பணை, 2 பாலங்கள் மற்றும் 2 குளங்கள் பராமரிப்பு என சுமாா் ரூ.17 லட்சம் செலவில் அதற்கான பணிகள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையினால் சின்ன அம்மன் மற்றும் பெரியூா்பட்டி குளங்கள் நிரம்பியுள்ளன. விவசாயிகளின் கூட்டு முயற்சியுடனும், பசுமை செந்துறை அமைப்பு மற்றும் திண்டிமா வனம் அமைப்பின் ஒத்துழைப்பால் பல ஆண்டுகளுக்க பின், இந்த குளங்களுக்கு நீரை திருப்பி ஆக்கப்பூா்வமான வெற்றியைப் பெற்றுள்ளோம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT