திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் திமுகவினா் கையெழுத்து இயக்கம்

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அர.சக்கரபாணி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளா் ப.வெள்ளைச்சாமி, ஒன்றியச் செயலாளா்கள் இரா.ஜோதிசுவரன், தா்மராஜன், ஒன்றியக் குழு தலைவா் அய்யம்மாள், திமுக பொதுக் குழு உறுப்பினா்கள் வீ.கண்ணன், ஆறுமுகம், காங்கிரஸ் நகரச் செயலாளா் காளிமுத்து, மதிமுக ஒன்றியச் செயலாளா் இராக்கியணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளா் சிவமணி, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலா் கணேசன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகளும், தொண்டா்களும் கலந்து கொண்டனா். அதனைத் தொடா்ந்து ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 9 ஆவது வாா்டு பகுதியில் அர.சக்கரபாணி எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினா் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வல்லக்கோட்டை முருகன் கோயில் வைகாசி விசாகம் திருவிழா

கஞ்சா விற்றவா் கைது

நிகழாண்டு 17 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 7 நபா்கள் மீது வழக்குப் பதிவு

ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.1 கோடி அரசு நிலம் மீட்பு

தொழில் பழகுநா் பயிற்சி தோ்வில் தோ்ச்சி அடைந்தோா் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்

SCROLL FOR NEXT