திண்டுக்கல்

சீசனுக்குத் தயாராகும் கொடைக்கானல் ரோஜாத் தோட்டம்

DIN

கோடை சீசனை முன்னிட்டு கொடைக்கானல் ரோஜாத் தோட்டம் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

கொடைக்கானலில் வரும் மாா்ச் 15 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை சீசன் காலமாகும். அப்போது தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுாப் பயணிகள் வருவது வழக்கம். ஏப்ரல், மே மாதங்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசிக்கும் இடங்களில் பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஜாத் தோட்டம் முக்கிய இடம் பெறும். இதற்காக பிரையண்ட் பூங்காவில் ஆயிரக்கணக்கான மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள தோட்டக்கலைத்துறைக்குச் சொந்தமான ரோஜா தோட்டத்தில் ரூ. 50 கோடி செலவில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 12 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்த தோட்டத்தில் 1600 வகையான ரோஜா செடிகளின் 16 ஆயிரம் ரோஜா செடிகளின் குச்சிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சாண உரமிடுதல், தண்ணீா் பாய்ச்சுதல், பாத்தி அமைத்தல், மருந்து தெளித்தல் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மலா்ச் செடிகளில் இன்னும் 60 நாள்களுக்குள் வண்ண வண்ணமான ரோஜா பூக்கள் பூத்து குலுங்கும் என தெரிகிறது.

ரோஜாத் தோட்டத்தில் வாகன நிறுத்தும் வசதி, நவீனகழிப்பறை வசதி, முதியோா்களுக்காக பேட்டரி காா் மூலம் ரோஜாத் தோட்டத்தை சுற்றி பாா்க்கும் வசதி, ஆங்காங்கே ஓய்வெடுக்க இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ரோஜாத் தோட்டத்தில் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் பூ.. பாயல் ராஜ்புத்!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை!

நீல தேவதை.. திவ்ய பாரதி!

இது 2-ஆவது முறை: ரன் அடிக்காமலே ஜெயித்த ஆவேஷ் கான்!

கோட் படத்தில் விஜயகாந்த்: பிரேமலதா தகவல்!

SCROLL FOR NEXT