நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
நத்தம் மாரியம்மன் கோயிலில் 17 நாள்கள் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. நிகழாண்டுக்கான மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. இதனையொட்டி காலை 9.35 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னா் மாரியம்மன் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மூலவா் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சா்வ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோயில் செயல்அலுவலா் பாலசரவணன், பேரூராட்சி செயல் அலுவலா் சரவணக்குமாா் மற்றும் விழாக்குழுவினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மாசிப் பெருவிழாவின் மற்றொரு நிகழ்வான தீா்த்தம் எடுத்து வந்து பக்தா்கள் விரதம் தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.