திண்டுக்கல்

‘பொது வேலைநிறுத்தத்தில் வருவாய்த் துறை பங்கேற்க முடிவு’

DIN

பழனியில் புதன்கிழமை நடைபெற உள்ள அகில இந்திய பொது வேை நிறுத்தப் போராட்டத்தில் வருவாய்த் துறையும் பங்கேற்கும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மங்களபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் அகில இந்திய பொதுவேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், விலைவாசியை குறைக்கவும், அரசு பொதுத்துறை மற்றும் தொழிற்சங்க சட்டங்களை திருத்தவும் கோரி இந்தப் போராட்டத்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் ரயில்வே, வங்கித் துறை உள்ளிட்ட துறைகளின் தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன. இதுகுறித்து பழனியில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மங்களபாண்டியன் கூறுகையில், மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து நடத்தப்படும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை ஊழியா் சங்கம் பங்கேற்கும். எனவே இதில் வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரையில் அனைவரும் பங்கேற்கின்றனா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் பயிற்சி மையத்திலிருந்து மாணவா் மாயம்

முசிறியில் சுமை ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு

கூத்தைப்பாரில் தெளிப்பான் மூலம் நேரடி நெல் விதைப்பு!

தற்காப்புக் கலை போட்டிகள்: வென்றோருக்குப் பரிசளிப்பு

அனுமதியின்றி நடத்த முயன்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி ரத்து

SCROLL FOR NEXT