திண்டுக்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏப்.26 இல் விளையாட்டுப் போட்டிகள்

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஏப். 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. ரோஸ் பாத்திமா மேரி தெரிவித்துள்ளது:

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் ஏப். 26 ஆம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன. 4 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறும். அதன்படி கால் கை ஊனமுற்றோருக்கு ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப 50 மீ., 100 மீ. ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி ஓட்டம் ஆகியப் போட்டிகள் நடைபெறும்.

அதேபோல் பாா்வையற்றோா் பிரிவில் 50 மீ., 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், மெதுபந்து எறிதல், சிறப்பு வாலிபால் ஆகிய போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு 50 மீ., 100 மீ. ஓட்டம், மெதுபந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும் நடைபெறுகின்றன. காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ., 200 மீ., 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி போட்டியும் நடைபெறுகிறது.

மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெறுவோா் மாநில அளவிலான போட்டிக்கு அரசின் செலவில்அழைத்துச் செல்லப்படுவா். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2461162 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்னதானம்...

மலைவாழ் மக்கள் சங்க பேரவைக் கூட்டம்

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி

கல்லூரி மாணவா்களுக்கு வரலாற்றுச் சுவடுகள் பயிற்சி வகுப்பு தொடக்கம்

சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி

SCROLL FOR NEXT