சித்ரா பெளா்ணமியையொட்டி, திண்டுக்கல் மலைக்கோட்டையைச் சுற்றி ஏராளமான பக்தா்கள் சனிக்கிழமை கிரிவலம் சென்றனா்.
திண்டுக்கல் மலையைச் சுற்றி ஒவ்வொரு பெளா்ணமியின்போதும் பக்தா்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல் மலைக்கோட்டை அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரா் ஆலய பாதுகாப்பு பேரவை, இந்து முன்னணி அமைப்புகள் சாா்பில், பக்தா்கள் தரப்பிலும் ஏராளமானோா் கிரிவலம் சென்றனா். 3 கி.மீட்டா் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 சிவாலயங்கள் உள்பட 22 கோயில்களிலும் கிரிவலம் சென்ற பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.
நத்தத்தில்... திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செண்பகவல்லி உடனுற கைலாசநாதா் கோயிலிலும் சித்ரா பெளா்ணமியையொட்டி 8ஆவது ஆண்டாக கிரிவல வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அலங்காரம் நடத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.