திண்டுக்கல்

கொடைக்கானல் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கொடியிறக்க நிகழ்ச்சி

DIN

கொடைக்கானல் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியிறக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கொடைக்கானல் உகாா்த்தே நகா்ப் பகுதியிலுள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கடந்த 10 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் சிறப்புத் திருப்பலி மற்றும் ஜெப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளை முன்னிட்டு, அருட்பணியாளா் பீட்டா் சகாயராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலியும், நற்கருணை மற்றும் ஜெப வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கொடிக் கம்பத்தில் மாதாவின் கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

'ஜிஎஸ்டி' வரி அல்ல… வழிப்பறி! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கள்ளழகர் திருவிழா: ஏப் 23-ல் மதுரைக்கு உள்ளூர் விடுமுறை

SCROLL FOR NEXT