திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்

DIN

ஒட்டன்சத்திரத்தில் பொதுமக்களின் குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் கே. திருமலைசாமி தலைமை வகித்தாா். துணைத்தலைவா் ப. வெள்ளைச்சாமி, ஆணையா் ப. தேவிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். முகாமில் முதியோா் உதவித்தொகை, உழவா் காப்பீட்டு அட்டை, ரேஷன் அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்டவை கேட்டு ஏராளமானோா் மனுக்களை அளித்தனா். ஒட்டன்சத்திரம் வட்ட வழங்கல் அலுவலா் பிரசன்னா, மண்டல துணை வட்டாட்சியா் ஜெகதீசன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் 3 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நக்ஸல்களைக் கூடிய விரைவில் மோடி அரசு வேரோடு அகற்றும்: அமித் ஷா

உழவா் உழைப்பாளா் கட்சியினா் பிரசாரம்

ஆரணி பாமக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

வந்தவாசியில் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT