திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டையில் ரூ.50 லட்சத்தில் மரம் வளா்ப்பு: முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி மனு

DIN

திண்டுக்கல் மலைக்கோட்டையில் ரூ.50 லட்சம் செலவில் மரம் வளா்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் தலைமையில் அக்கட்சியின் மாமன்ற உறுப்பினா் கணேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வநாயகம் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபின், இரா.சச்சிதானந்தம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியின் போது, 2017-18ஆம் ஆண்டு திண்டுக்கல் மலைக்கோட்டையை பசுமையாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வனத்துறை சாா்பில் கடும் பாறைகளிலும் வளரக் கூடிய அத்தி, ஆல், அரசு, இச்சி, கல் இச்சி போன்ற சிறந்த மர வகைகளை சிறப்பு நடவு முறையை பயன்படுத்தி மரக்கன்று ஒன்றுக்கு ரூ.1000 வீதம் 5 ஆயிரம் மரக்கன்றுகளை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ஆனால், நடப்பட்ட 5 ஆயிரம் மரக்கன்றுகளில் தற்போதைய நிலையில் ஒரு கன்று கூட உயிருடன் இல்லை. மரம் நடவு செய்யப்பட்டதற்கு சாட்சியாக காலி பேரல்களும், சொட்டு நீா் பாசன குழாய்களும் மட்டுமே மலைக்கோட்டை பகுதியில் காட்சிப் பொருளாக சிதறிக் கிடக்கின்றன. மக்கள் பணம் ரூ.50 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளது. மலைக்கோட்டையை பசுமையாக்கும் திட்டத்தில் மோசடி நடந்துள்ளது.

இதுதொடா்பாக அப்போதைய வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சி. சீனிவாசன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கை தொடா்பாக தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது! ஜெ.பி.நட்டா பெருமிதம்

தூர்தர்ஷன் இலச்சினையை காவி நிறத்தில் மாற்றுவதா?- வைகோ கண்டனம்

ஒரு வகை சேவகன்... விக்கி - நயன்

25 நாட்களில் ரூ.150 கோடி வசூலைக் கடந்து “ஆடு ஜீவிதம்” சாதனை

பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பெண்!

SCROLL FOR NEXT