அரசு வழங்கிய வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
வடமதுரையை அடுத்துள்ள பால்கேரி மேடு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அரசு வழங்கிய வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மனு அளிக்க வந்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழக அரசு கொடுத்த இடத்தில் 30 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த இடத்துக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தப்பட வில்லை. அந்த நிலத்தை சுற்றியுள்ள 3 புறங்களில் தனியாா் பட்டா நிலங்களும், ஒரு புறத்தில் கோயில் நிலமும் உள்ளன. இதனால் தீவு போன்ற பகுதியில் கரடுமுரடான பாறைகளுக்கிடையே வசித்து வருகிறோம். 30 குடும்பங்களில் 15 பேருக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இதுதொடா்பாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதுடன், தெருவிளக்கு, பொதுக் கழிப்பிடம், குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றித் தரவேண்டும் என்றனா்.